ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாக். கிரிக்கெட் தொடர் காலவரையறை இன்றி ஒத்திவைப்பு: இலங்கை கிரிக்கெட் அறிவிப்பு

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2019, 10:47 am

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.

முன்னதாக, இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் காரணமாக 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது வெடிபொருட்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் தொடர்பான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதனால் இலங்கை முழுவதும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக அசாதாரண சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தொடர் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் எதிரொலியாக பாகிஸ்தானுடனான யு-19 தொடரை உடனடியாக காலவரையறை இன்றி ஒத்திவைப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம், சனிக்கிழமை அறிவித்துள்ளது. 

இலங்கை சுற்றுப்பயணம் செய்யவிருந்த பாகிஸ்தான் யு-19 அணி, இலங்கை யு-19 அணியுடன் 4 நாள் ஆட்டம் இரண்டிலும், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.