அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு

ஆஃப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பார்வையாளர்கள் 8 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:05 pm

Raghavendran

ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. 

இந்நிலையல், அந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பார்வையாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை.

இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி, கூறியதாவது:

இந்த புனித ரம்ஜான் மாதத்தில் கூட பயங்கரவாதிகள் மக்களைக் கொல்வதை நிறுத்தவில்லை. தற்போது மக்கள் நிறைந்த விளையாட்டு அரங்கில் இதுபோன்ற பயங்கரவாத செயலில் ஈடுபட்டதன் மூலம் அவர்கள் மனிதத்துக்கு எதிரானவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்றார்.

கடந்த வருடம் தான் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதையடுத்து தங்களின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக வருகிற ஜூன் மாதம் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.