அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தாய்மையை அடுத்து வெற்றியுடன் மீண்டும் களமிறங்கினார் செரீனா வில்லியம்ஸ்

தாய்மை அடைந்த பின்னர் நடைபெற்ற முதல் போட்டியிலேயே வெற்றியுடன் மீண்டும் களமிறங்கியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

Raghavendran

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு சமீபத்தில் குழந்தைப் பிறந்தது. தனது மகப்பேறு காரணமாக சுமார் 15 மாதங்கள் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வில் இருந்தார்.

இதையடுத்து இண்டியன் வெல்ஸ் ஏடிபி தொடரில் மீண்டும் களமிறங்கியுள்ள செரீனா, கஸகஸ்தான் வீராங்கனை ஸரீனா தியாஸுக்கு எதிரான ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை பங்கேற்றார். 

அதில், 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று 2-ஆவது சுற்று ஆட்டத்துக்கு முன்னேறினார். 

நீண்டநாட்களுக்குப் பிறகு தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றது சற்று சவாலாக இருந்தது. இருப்பினும் எனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் நோக்கத்துடனேயே பங்கேற்றேன். இதில் வெற்றியுடன் தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று செரீனா வில்லியம்ஸ் கூறினார்.

முன்னதாக, 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ள செரீனா வில்லியம்ஸ், கடைசியாக 2017 ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்று விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.