முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

ஆஸ்திரேலிய ஓபன்: கரோலின் வோஸ்னியாக்கி முதன்முறையாக சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கரோலின் வோஸ்னியாக்கி வெற்றிபெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:05 pm

Raghavendran

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்-டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தினர்.

மெல்போர்ன் நகரில் நடைபெறும் இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான சைமோனாவும், போட்டித் தரவரிசையில் 21-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை 6-3, 4-6, 9-7 என்ற செட்களில் வீழ்த்தினார்.

2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி 6-3, 7-6(7-2) என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸை வீழ்த்தினார்.

ஆஸ்திரேலிய ஓபனில் வோஸ்னியாக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது இது முதல் முறையாகும். அதேவேளையில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இந்நிலையில், சைமோனா ஹேலப்-டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகியோர் கடுமையாக மோதினர். இதனால் ஆட்டம் மேலும் பரபரப்பானது. தரவரிசையில் முதல் இரு இடங்களில் உள்ள வீராங்கனைகள் என்பதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.

சமார் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் கடும் சவால்களுக்கு இடையே 7-6 (7-2), 3-6, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி வெற்றிபெற்று ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்லும் முதல் டென்மார்க் வீராங்கனை என்ற சாதனைப் படைத்தார். மேலும், மகளிர் தரவரிசையில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.