சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

'தலைசிறந்த ஒருநாள் வீரர்'- விராட் கோலிக்கு மைக்கெல் கிளார்க் புகழாரம்!

ஒருநாள் கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர் என விராட் கோலிக்கு மைக்கெல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:13 pm

Raghavendran

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும் அந்த தொடரில் சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையைப் பெற்றார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் 3-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் 4-ஆவது போட்டியிலும் வெற்றிபெற்று தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணியை வீழ்த்தி முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்த தொடரிலும் விராட் கோலி 2 சதங்கள் அடித்துள்ளார். குறிப்பாக 3-ஆவது போட்டியில் சதமடித்ததுடன் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி. 

அதில், தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், இந்திய கேப்டன்களில் அதிக சதமடித்தவர், தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர், ஒரு இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த 2-ஆவது கேப்டன் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. டேவிட் வார்னர், மைக்கெல் வான் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவ்வரிசையில் ஒருநாள் போட்டியின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. இவருக்கு எதிராக பந்துவீசுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. தலைசிறந்த திறமைசாலி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.