ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பேட்டியின் நடுவே திடீரென பெண் செய்தியாளரை முத்தமிட்ட டென்னிஸ் வீரர்! (வீடியோ)

நேரலை நிகழ்ச்சியாக இல்லாமல் இருந்திருந்தால் அந்த டென்னிஸ் வீரரைத் தாக்கியிருப்பேன் என பெண் செய்தியாளர் பேட்டி...

News image
Updated On :31 மே 2017, 12:46 pm

ஏற்கெனவே பெண் செய்தியாளரிடம் தவறாக நடந்துகொண்ட கெயில் அதற்குண்டான விளைவுகளை நன்கு அனுபவித்தார். அதேபோன்ற பெண் செய்தியாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட டென்னிஸ் வீரர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது பிரெஞ்சு ஓபன் நிர்வாகம். 

பிரான்சு நாட்டைச் சேர்ந்த 21 வயது டென்னிஸ் வீரரான மேக்ஸிம் ஹாமுவை யூரோஸ்போர்ட் பெண் செய்தியாளர் மலி தாமஸ் பேட்டி கண்டார். பேட்டியளித்துக்கொண்டிருக்கும்போது திடீரென மலியை முத்தமிட முயன்றார் மேக்ஸிம். இதற்குப் மலி மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் அவரிமிருந்து ஒதுங்க முயன்றபோதும் மீண்டும் காதின் அருகே முத்தமிட்டார் மேக்ஸிம். இதுபோல மூன்று முறை அவர் மலியின் விருப்பத்துக்கு மாறாக முத்தமிட்டார். நேரலை நிகழ்ச்சி என்பதால் இப்படி நடந்துகொண்டபிறகும் மேக்ஸிமைத் தொடர்ந்து பேட்டி கண்டார் மலி. 

இதன் வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதையடுத்து மேக்ஸிமின் நடத்தைக்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது சங்கடத்தை ஏற்படுத்திய செயல். நேரலையில் இல்லாமல் மட்டும் இருந்திருந்தால் மேக்ஸிமை நான் தாக்கியிருப்பேன் என மலி தாமஸ் பேட்டியளித்துள்ளார். 

இதையடுத்து, பெண் செய்தியாளரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதைக் கண்டிக்கும் விதமாக பிரெஞ்சு ஓபன் நிர்வாகம் மேக்ஸிமுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.