டெஸ்ட் அணியில் முகுந்த், ஒருநாள் அணியில் தினேஷ் கார்த்திக் என சமீபத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது.
இன்னும் பலபேருக்கு அந்த வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஆருடம் சொல்கிறார் தமிழக கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் எஸ். ஷரத். அவர் மேலும் கூறியதாவது:
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அணியில் முதலில் தினேஷ் கார்த்திக் இடம்பெறாதது துரதிர்ஷ்டமே. பிறகுதான் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவரை முன்பே தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
அபினவ் முகுந்துக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. பாபா அபரஜித் இந்தியா ஏ அணிக்காக விளையாடியுள்ளார். கெளசிக் காந்தி, இந்திரஜித், அஸ்வின் கிறிஸ்ட், விக்னேஷ் ஆகியோரும் இந்திய ஏ அணியில் இடம்பெறுவார்கள் என நம்புகிறேன்.
விஜய் சங்கருக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஐபிஎல்-லில் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நன்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளார். இன்னொரு நல்ல உள்ளூர் போட்டிகளுக்கான சீசன் அமைந்துவிட்டால், அவர் இந்திய அணிக்கான ஆல்ரவுண்டர் போட்டியில் நிச்சயம் இருப்பார் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிஎஸ்கே பேட்டிங்: சர்ஃபராஸ் கானுக்குப் பதிலாக உர்வில் படேல்!

மே 1 முதல் சென்னையில் வெயில் சுட்டெரிக்கும்! தமிழ்நாடு வெதர்மேன்

தஞ்சை பெரிய கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பார்சிலோனா அசத்தல் வெற்றி: கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


