எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

விராட் கோலியை டொனால்ட் டிரம்ப்புடன் ஒப்பிட்டு ஆஸி. ஊடகம் சாடல்!

விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் என இந்திய கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:17 am

எழில்

விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் என இந்திய கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தின்போது பந்து பவுண்டரிக்கு செல்வதை பாய்ந்து சென்று தடுத்தார் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் காயமடைந்த கோலி, 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். ஆனால் 2-வது நாள் ஆட்டத்தின்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தோள்பட்டையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸி. வீரர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்து இந்திய அணியின் பிஸியோ பேட்ரிக் ஃபர்ஹர்ட்டைக் கிண்டலடித்ததாகத் தெரிகிறது. இதனால் கடுப்பான கோலி செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது: நான்கைந்து பேர் பேட்ரிக்கின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் எனத் தெரியவில்லை. அவர் எங்களுடைய பிஸியோ. அவருடைய வேலை எனக்குச் சிகிச்சை அளிப்பது. அவரைக் கிண்டலடிக்க வேண்டிய காரணம் என்ன? எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அவர்களிடம்தான் ஏன் அவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்று கேட்கவேண்டும் என்றார். ஆனால் கோலியின் குற்றச்சாட்டை ஆஸி. கேப்டன் ஸ்மித் மறுத்தார். நாங்கள் பேட்ரிக்கைக் கிண்டல் அடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கோலி காயத்திலிருந்து குணமானதற்கு அவர் முக்கிய காரணம் என்றார். இதுமட்டுமில்லாமல் கோலி - ஸ்மித் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஆஸி. ஊடகமான டெய்லி டெலிகிராஃப், விராட் கோலியைக் கடுமையாகச் சாடியுள்ளது. அதில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் ஆகிவிட்டார். அதிபர் டிரம்ப் போல தனது தோல்விகளுக்கான காரணமாக ஊடகங்களைக் குறை சொல்கிறார்.

விராட் கோலியின் காயத்தை ஸ்மித் கேலி செய்யவில்லை. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆஸி. அணியிடம் பேசியுள்ளது. ஆனால் கோலி, வார்னர் அவுட் ஆனபோது ஸ்மித் தன்னைக் கிண்டலடித்ததாக எண்ணிக்கொண்டு ஸ்மித்தை அதே பாணியில் கேலி செய்துள்ளார்.  

கோலி இந்தத் தொடரில் மோசமாக விளையாடி வருகிறார். ஆனால் அவர் தொடர்புடைய சர்ச்சைகளால் கிரிக்கெட் ஆன்மா உயிரற்றதாக உள்ளது.

கிரிக்கெட்டில் ஒற்றுமையைப் பாதுகாக்க கேப்டன்கள் முயற்சிக்கவேண்டும். ஆனால் நூறு வருடங்களுக்கு மேலாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட்டின் அஸ்திவாரங்களில் ஒன்றை அழிப்பதாக கோலியின் நடவடிக்கைகள் உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஏமாற்றுபவர்களாகச் சித்தரித்த கோலிக்கு எவ்வித தண்டனையும் ஐசிசியால் அளிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ என யாரும் அவர்மீது கை வைக்கமுடியாது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் சமாதான உடன்படிக்கையை பிசிசிஐ மேற்கொண்டபோதும் கோலி தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெறவில்லை. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா போல கோலியும் எதிரணி மீதும் விளையாட்டின் மீதும் மதிப்பு, மரியாதை இல்லாமல் உள்ளார். இதன்மூலம் அவர் அணியையும் தன்னையும் ஊக்கப்படுத்திக்கொள்கிறார் என்று கடுமையாகச் சாடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.