திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

எங்களைக் கண்டு இந்திய அணி பயப்படுகிறது: மிட்செல் ஸ்டார்க்

இந்திய அணி எங்களைக் கண்டு அஞ்சுகிறது. ஏனெனில் இந்தியாவில் அவர்களைத் தோற்கடித்துள்ளோம்.

News image
Updated On :22 மார்ச் 2017, 9:21 am

கடைசி டெஸ்ட் இன்னும் சில நாள்களில் தொடங்கவுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. தர்மசாலாவில் நடைபெறுகிற கடைசி டெஸ்ட்டை வெல்லப் போகிறவர் யார் என்கிற ஆவல் அதிகமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். புணேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் அசத்திய ஸ்டார்க்கின் வலது கால் எழும்பில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக நாடு திரும்பினார்.

இந்நிலையில் தொடர் குறித்து அவர் கூறியதாவது:

எங்களை விடவும் இந்திய அணியினர் அதிகமாக வாக்குவாதம் செய்கிறார்கள். ஆஸி. இளம் வீரர்கள் அற்புதமாக பல்வேறு தருணங்களில் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். தங்களைத் தற்காத்துக்கொள்ள இந்திய அணியினர் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் சவாலுக்குத் தயாராக உள்ளோம். இந்திய அணி எங்களைக் கண்டு அஞ்சுகிறது. ஏனெனில் இந்தியாவில் அவர்களைத் தோற்கடித்துள்ளோம். கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி வெல்லும் என நினைக்கிறேன். நாங்கள் சவாலை மிக அற்புதமாக எதிர்கொண்டுள்ளோம். நாங்கள் போட்டிக்குத் தயாராக உள்ளோம். சரியான முறையில் திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லமுடியும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.