குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்!

ஆஸ்திரேலிய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:16 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து, 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 152 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா அற்புதமாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார். அவருடன் தகுந்த பார்ட்னர்ஷிப் அமைத்த ரித்திமான் சாஹா சதம் கடந்தார். இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. வார்னர் 14, நாதன் லயன் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரென்ஷா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமையில் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சந்திக்கமுடியாமல் தடுமாறியது. இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரென்ஷா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜா ஸ்மித்தை 21 ரன்களில் வீழ்த்தினார். முக்கியமான இரு வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது ஆஸி. அணி.

33 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது ஆஸி. அணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.