இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பொறுப்பான பேட்டிங்கால் ஆட்டம் டிராவை நோக்கி நகர்கிறது.
ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து, 137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 178 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில், ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக கேப்டன் கோலி அறிவித்தார். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 152 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா அற்புதமாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார். அவருடன் தகுந்த பார்ட்னர்ஷிப் அமைத்த ரித்திமான் சாஹா சதம் கடந்தார். இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய ஆஸ்திரேலியா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. வார்னர் 14, நாதன் லயன் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரென்ஷா 7 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமையில் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சந்திக்கமுடியாமல் தடுமாறியது. இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரென்ஷா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜா ஸ்மித்தை 21 ரன்களில் வீழ்த்தினார்.
உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 36 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது. ஷான் மார்ஷ் 15, ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்னமும் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 69 ரன்கள் பின்தங்கிய ஆஸி. அணி தோல்வியைத் தவிர்க்கப் போராடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மார்ஷும் ஹேன்ஸ்காம்பும் அபாரமாக ஆடி இந்திய அணியின் பல்வேறு முயற்சிகளை முறியடித்தார்கள். இதனால் தேநீர் இடைவேளையின்போது 69 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து தோல்வியைத் தவிர்ப்பதில் கிட்டத்தட்ட வெற்றி கண்டுள்ளார்கள் மார்ஷும் ஹேண்ட்ஸ்காம்பும். ஆஸி. அணி 3 ரன்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் ஆட்டம் டிராவை நோக்கிச் செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


