சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

ஆஸ்திரேலிய ஓபன்: ஸ்ரீகாந்த் அபார வெற்றி! இறுதிச்சுற்றுக்குத் தகுதி!

தொடர்ந்து மூன்று சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்கிற பெருமையை...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:16 pm

எழில்

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் ஸ்ரீகாந்த் 21-10 21-14 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் யூகி ஷியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

யூகியுடன் கடைசியாக மோதிய மூன்று ஆட்டங்களிலும் ஸ்ரீகாந்த் வென்றுள்ளார். இந்தப் போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் தொடர்ந்து மூன்று சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் ஸ்ரீகாந்த். இதற்கு முன்பு சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசியா ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். சிங்கப்பூரில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்ரீகாந்த், இந்தோனேசியா போட்டியை வென்று சாம்பியன் ஆனார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.