ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து ராமச்சந்திர குஹா விலகல்!

பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். 

News image
Updated On :1 ஜூன் 2017, 6:28 am

பிசிசிஐ நிர்வாகக் குழுவிலிருந்து வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கு முன்னாள் தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி) வினோத் ராய் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

ஓய்வு பெற்ற நீதிபதி லோதா குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட்டு பிசிசிஐக்கு முறைப்படி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் வரை வினோத் ராய் தலைமையிலான குழுவே பிசிசிஐயை நிர்வகிக்கும் என்று அறிவித்தது.  இந்தக் குழுவில் வினோத் ராய் தவிர, வரலாற்று ஆய்வாளரும், கிரிக்கெட் எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா, ஐடிஎஃப்சி (உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி நிறுவனம்) நிர்வாக இயக்குநர் விக்ரம் லிமாயே, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோரும் இடம்பெற்றார்கள். 

இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக பிசிசிஐ பொறுப்பில் இருந்து ராமச்சந்திர குஹா விலகியுள்ளார். மேலும் பிசிசிஐ நிர்வாகக் குழுவில் இருந்து தன்னை விடுவிக்கும்படியும் உச்ச நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பிசிசிஐயை சீரமைப்பதற்காக லோதா குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துமாறு கடந்த ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி பிசிசிஐக்கு உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க பிசிசிஐ தொடர்ந்து மறுத்து வந்தது. இதையடுத்து பிசிசிஐ நிர்வாகிகளை நீக்குமாறு லோதா குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து லோதா குழுவின் பரிந்துகளை டிசம்பர் 3-ஆம் தேதிக்குள் அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் பிசிசிஐ அமல்படுத்தவில்லை. இதையடுத்து பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே உள்ளிட்டோரை நீக்கிய உச்ச நீதிமன்றம், பிசிசிஐ மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களில் நிர்வாகிகளாக இருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என உத்தரவிட்டது. பிறகு, புதிய நிர்வாகக் குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். தற்போது அக்குழுவில் இடம்பெற்ற ராமச்சந்திர குஹா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.