கேரளாவில் சோகம்: மைதானத்திலேயே 20 வயது கிரிக்கெட் வீரர் மரணமடைந்த விடியோ
கேரளாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் 20 வயது வீரர் மைதானத்திலேயே மரணமடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கேரளாவின் காசர்காட் என்ற இடத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரின் போது 20 வயது வீரர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போட்டியின் போது பந்துவீச தயாரான பத்பநாப் என்ற வீரர் திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
இதையடுத்து அருகிலிருந்த நடுவர் மற்றும் சக வீரர்கள் அவருக்கு உதவுவதற்குள்ளாக மாரடைப்பு ஏற்பட்டு மரணடைந்தார். இதுதொடர்பாக மஞ்சேஷ்வரா காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த விடியோ பதிவை நியூஸ் 9 என்ற ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...