தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

127 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து: ஆஷஸ் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியா

3-ஆவது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 127 ரன்கள் பின்தங்கியுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:22 pm

Raghavendran

இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் 3-ஆவது டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி தனது  முதல் இன்னிங்ஸில் 115.1 ஓவர்களில் 403 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டேவிட் மலான் அதிகபட்சமாக 140 ரன்கள் குவித்தார். பேர்ஸ்டோவ் 119 ரன்கள் சேர்த்தார்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஹாசில்வுட் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் ஸடீவன் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டைச் சதம் விளாசினார். மொத்தம் 399 பந்துகளைச் சந்தித்து 30 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸரின் உதவியுடன் 239 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

சொந்தமண்ணில் ஸ்மித் அடித்த முதல் இரட்டை சதம் இதுவாகும். அதேநேரம், ஆஷஸ் வரலாற்றிலும், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதமாக இது அமைந்துள்ளது.

அவருடன் விளையாடிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷும் சதம் விளாசினார். அவர் 29 பவுண்டரிகளின் உதவியுடன் 181 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரின் விக்கெட்டையும் இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றினார்.

இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 179.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்காரணமாக இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 259 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

இந்நிலையில், தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்கமே சரிவை ஏற்படுத்தியது. ஸ்டோன்மேன் 3, கூக் 14 ரன்களுக்கு ஹாசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜோ ரூட்டும் 14 ரன்களுக்கு லயன் பந்துவீச்சில் வெளியேறினார்.

சற்று தாக்குபிடித்த வின்ஸ் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மாலன் 28 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்துள்ளது. இருப்பினும் ஆஸ்திரேலியாவை விட 127 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.