ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இந்திய அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும்: உத்தப்பா விருப்பம்!

இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதுதான் என் கனவு. இந்திய டெஸ்ட் அணியில்...

News image
Updated On :27 ஏப்ரல் 2017, 10:59 am

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 30-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இரு அணிகளுக்கு இடையே புணேவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வென்றது. கொல்கத்தா வீரர்கள் ராபின் உத்தப்பா, கம்பீர் ஆகியோர் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். ராபின் உத்தப்பா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நேற்று உத்தப்பாவின் ஆட்டம் அதிரடியாக அமைந்தது. 26 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அவர் அரைசதம் கடந்தார். 47 பந்துகளுக்கு 7 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் உத்தப்பா.

ஆட்டம் முடிந்தபிறகு உத்தப்பா கூறியதாவது:

தொடர்ந்து நன்றாக விளையாடவேண்டும் என்பதுதான் முக்கியம். அதை நான் செய்துவருகிறேன். இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதுதான் என் கனவு. இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவேண்டும்.

கனவுகள் எல்லாம் உள்ளன. ஒரேடியாக அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கக்கூடாது. இன்று என்ன கிடைக்கிறதோ அதில் திறமையை வெளிப்படுத்தவேண்டும். உழைப்பு என்றும் வீண் போகாது என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. எனக்கான வாய்ப்பு நிச்சயம் வரும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.