இந்த வருட தமிழ்நாடு பிரீமியர் லீக், ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 20 வரை நடக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருட டிஎன்பிஎல் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் அந்தக் காலத்தில் நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் ஆகஸ்டில் இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதனால் ஸ்டார் டிவியுடனான தொலைக்காட்சி ஒளிபரப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. மேலும் அந்த டெஸ்ட் தொடரில் முரளி விஜய், அஸ்வின், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற வாய்ப்புண்டு. இதனால் டிஎன்பிஎல்-லில் நட்சத்திரங்கள் பங்கேற்கும் வாய்ப்புகள் குறையும். இந்த முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு டிஎன்பிஎல் இந்த வருடம் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ், ரூபி காஞ்சி வாரியர்ஸ், மதுரை சூப்பர்ஜயன்ட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த வருடம் 28 லீக் ஆட்டங்கள், 2 அரையிறுதி, இறுதி ஆட்டம் என மொத்தம் 31 ஆட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் 12 ஆட்டங்களும், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் 10 ஆட்டங்களும், திருநெல்வேலியில் 9 ஆட்டங்களும் நடைபெற்றன. இறுதிச்சுற்றில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளை எதிர்த்து தலா ஒரு முறை மோதின. லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த வருடம் இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.3 கோடியே, 40 லட்சம். சாம்பியன் பட்டம் வென்ற தூத்துக்குடி அணிக்கு ரூ.1 கோடியும், 2-ஆவது இடம்பிடித்த சேப்பாக் அணிக்கு ரூ.60 லட்சமும், அரையிறுதி வரை முன்னேறிய அணிகளுக்கு தலா ரூ.40 லட்சமும், கடைசி 4 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.25 லட்சமும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
வில்லியனூா் மாதா கோயிலில் திருட்டு

பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்து: இளைஞா் மரணம்

பைக் மீது காா் மோதி விபத்து: கணவன் கண்முன் மனைவி உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


