பட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

கிறிஸ் லின் ஐபிஎல் போட்டியில் மீண்டும் விளையாடுவார்: காலிஸ்

கிறிஸ் லின்னுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருடைய காயத்தின் நிலை பயந்ததுபோல இல்லை.

News image
Updated On :13 ஏப்ரல் 2017, 5:11 am

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் லின்னுக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது மும்பை வீரர் ஜோஸ் பட்லரின் கேட்ச்சை பிடிக்க முற்பட்டபோது, அவருடைய தோள்பட்டையில் அடிபட்டது. இதையடுத்து முடநீக்கியல் நிபுணரின் சிகிச்சைப் பிறகு தொடர்ந்து விளையாடினார் கிறிஸ் லின். கடந்த 2 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இடது தோள்பட்டையில் காயமடைந்துள்ளார் கிறிஸ் லின். இந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 93 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தப் போட்டியில் மும்பைக்கு எதிராக 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். 

கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ், இதுபற்றி கூறியதாவது: கிறிஸ் லின்னுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருடைய காயத்தின் நிலை பயந்ததுபோல இல்லை. எங்கள் மருத்துவர்கள் அவருக்குத் தகுந்த சிகிச்சை அளித்துவருகிறார்கள். எனவே இந்த ஐபிஎல்-லில் அவர் மீண்டும் விளையாட வாய்ப்புண்டு என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.