சென்னை டெஸ்ட்: திடீர் செலவும் வருமானமும்!
வர்தா புயல், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தையும் விட்டுவைக்கவில்லை.


இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை சென்னையில் தொடங்குகிறது. சென்னையை கடந்த திங்கள்கிழமை புரட்டிப் போட்ட வர்தா புயல், சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் இரு அணி வீரர்களும் பயிற்சி பெற முடியவில்லை. புதன்கிழமை முழுவதும் இரு அணியினரும் ஹோட்டலுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் திட்டமிட்டபடி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) அறிவித்துள்ளது.
வர்தா புயல் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலக்கரி தனல் மூலம் அதை உலர வைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இன்று நல்ல வெயில் அடிப்பதால் ஆடுகளம் ஆட்டத்துக்கு உகந்தவாறு தயாராகிவிடும்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் வியாழக்கிழமை ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இந்திய அணியினரின் பயிற்சி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்து வீரர்கள் பகல் 12.30 மணியளவில் பயிற்சியை தொடங்கவுள்ளனர்.
வர்தா புயலால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குக் கூடுதலாக ரூ. 2 கோடி வரை செலவாகியுள்ளது. எப்படியும் ரூ. 3 கோடிக்கு மேல் தாண்டாது என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. வீரர்களின் தங்கும் செலவு, ஆட்ட ஊதியம் போன்ற செலவுகளை பிசிசிஐ கவனித்துக்கொள்ளும். மேலும் டெஸ்ட் போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்த தொகை (ரூ. 56 லட்சம்) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கப்படாது. அதனைக் கொண்டு பிசிசிஐ செலவுகளைச் சமாளித்துக்கொள்கிறது. இதனால் சொந்தக் காசிலிருந்து செலவு செய்யவேண்டிய நிலைமையில் உள்ளது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். காவல்துறை, உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு இதுவரை ரூ. 2 கோடி செலவாகியுள்ளது. பாதுகாப்புக்காகக் காவல்துறைக்கு ரூ. 20 லட்சத்தைத் தினமும் வழங்கவேண்டும் ( 5 நாளைக்கு). இதுபோன்ற செலவுகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளாது. போட்டி நடத்தும் கிரிக்கெட் சங்கமே அதை எதிர்கொண்டாகவேண்டும்.
பிறகு எப்படி வருமானம் கிடைக்கும்? இந்தச் செலவுகள் எவ்வாறு வருமானமாக மாறும்?
விளம்பரங்கள் வழியாக பெரிய தொகை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்குக் கிடைக்கும். மேலும் டிக்கெட் கட்டணங்கள் மூலமாகவும் வருமானம் வரும். இதுவரை ரூ. 66 லட்சத்துக்கு டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை மழையால் ஆட்டம் தடைபட்டு, டெஸ்ட் போட்டி நடக்காமல் போனால் இன்சூரன்ஸ் மூலமாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ரூ. 5 கோடி கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...