எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளித்த தோனி, ஸீவா விடியோ

மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் ஸீவா ஆகியோர் புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:06 pm

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக முதல் போட்டிக்கு பின்னர் சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக புணே மாற்றப்பட்டது. 

இதையடுத்து நடப்பு சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தை தக்க வைத்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது. எனவே செவ்வாய்கிழமை நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் ஸீவா ஆகியோர் புணே மைதானத்துக்கு பிரியாவிடை அளிக்கும் விதமாக விடியோ ஒன்று எடுக்கப்பட்டு, அது தோனியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

முன்னதாக, புணே ஆடுகள ஊழியர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி பரிசளித்தார் ஒவ்வொருவருக்கும் சிஎஸ்கே அணி சார்பில் ரூ.20 ஆயிரம் வழங்கினார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதுபோன்று தோனி மற்றும் ஸீவா இருப்பது போன்ற ஓவியம் ஒன்று புணே ஆடுகள ஊழியர்கள் சார்பில் தோனிக்கு பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.