அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

வெளியேறியது பெங்களூரு: 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 30 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:05 pm

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக துவக்க வீரர் ராகுல் திரிபாதி 58 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்தார். ரஹானே 33, கிளாஸன் 312 ரன்கள் சேர்த்தனர். ஆர்சிபி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தனியாகப் போராடிய டி வில்லியர்ஸ் 53 ரன்கள் சேர்த்தார். பார்தீவ் படேல் 33 ரன்கள் எடுத்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஷ்ரேயாஸ் கோபால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் பிளே ஆஃப் சுற்றுப்போட்டிகளில் தங்கள் வாய்ப்பை தக்க வைத்துள்ளன. ஆனால், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.