கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராகுல், அஸ்வின் அதிரடி வீண்: 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோல்வி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

Raghavendran

11-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 44-ஆவது லீக் ஆட்டம் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்தூரில் நடைபெற்ற இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தது. 

அதிரடியாக ஆடிய துவக்க வீரர் சுனில் நரேன் 36 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 75 ரன்கள் குவித்தார். கேப்டன் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் விளாசினார். ஆண்ட்ரே ரசல் 3 இமாலய சிக்ஸர்களுடன் 31 ரன்கள் சேர்த்தார். 

இந்நிலையில், 246 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு துவக்க வீரர் ராகுல் சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினார். 29 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்தார். கேப்டன் அஸ்வின் 22 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் விளாசினார். ஆரோன் பிஞ்ச் 34 ரன்கள் சேர்த்தார்.

இருப்பினும் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து, 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.