எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
தென்னாபிரிக்க வீரர்கள். - படங்கள்: ஏபி, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ்.
Updated On :14 மே 2025, 9:48 am

DIN

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இருப்பதால் தென்னாப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வரும் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் மோதவிருக்கிறது.

இதன் காரணமாக ஏற்கனவே ஆஸி. வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்வதில் சிக்கல் எனக் கூறியிருந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க வீரர்களும் கலந்துகொள்ள மாட்டார்கள் என சிஎஸ்ஏ திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

8 தென்னாப்பிரிக்க வீரர்கள் - ககிசோ ரபாடா (குஜராத்), லுங்கி என்கிடி (ஆர்சிபி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), எய்டன் மார்கரம் (லக்னௌ), ரியான் ரிக்கல்டன் (மும்பை இந்தியன்ஸ்), கார்பின் போஷ் (மும்பை), மார்கோ யான்சென் (பஞ்சாப்), வியான் முல்டர் (சன்ரைசர்ஸ்).

பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. நிறுத்தப்பட்ட போட்டிகள் வரும் மே.17ஆம் தேதி முதல் ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில் சிஎஸ்ஏ (தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அசோசியேஷன்) கூறியதாவது:

ஐபிஎல் போட்டிகள் விளையாடுவது தனிநபரின் விருப்பம். யார் எங்கே விளையாடினாலும் மே 26ஆம் தேதி பயிற்சிக்கு வரவேண்டும். ஐபிஎல் போட்டிகள் மாற்றப்பட்டதால் எங்களுடைய திட்டத்தை மாற்றமுடியாது.

ஏனெனில் எங்களது முதன்மையான நோக்கம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்தான். இது குறித்து வீரர்களிடம் பேசிவிட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.