எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா? அருண் துமால் பேட்டி!

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுமா என்பது குறித்து...

News image
- படம் | AP
Updated On :8 மே 2025, 6:47 pm

DIN

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான நாளைய போட்டி நடைபெறுமா என்பது குறித்து ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நாளை நடைபெறவுள்ள போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடவுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தானின் ட்ரோன்களை இந்தியா இடைமறித்து தாக்கி அழித்து பதிலடி கொடுத்து வருகிறது.

எல்லையோர மாநிலங்களில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், தர்மசாலாவில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. திடலில் உள்ள விளக்குகள் அணைக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி ரசிகர்கள் திடலை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து ஐபிஎல் தொடர் நடைபெறுமா?

பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நாளை ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்பது குறித்தும், தொடர்ச்சியாக போட்டிகள் நடைபெறுமா என்பது குறித்தும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தற்போது உள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அரசிடமிருந்து எந்த ஒரு வழிகாட்டுதலும் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை. பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.