திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தோல்வியிலும் நற்செய்தி: சிஎஸ்கேவுக்காக தோனி புதிய சாதனை!

சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

News image
எம்.எஸ். தோனி- படம்: பிடிஐ
Updated On :29 மார்ச் 2025, 6:31 am

DIN

சேப்பாக்கில் நேற்றிரவு நடந்த போட்டியில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபியிடம் தோல்வியை சந்தித்தது. ஆனால், தோனி புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 196/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே 20 ஓவர்களில்146/8 ரன்கள் எடுத்தது.

இதில் தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அதிரடியாக அடித்தார். இருப்பினும் தோனி முன்பாகவே களமிறங்கி இருக்கலாம் என்ற விமர்சனம் அவர்மீது எழுந்து வருகிறது.

சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி.

இதற்கு முன்பாக சிஎஸ்கேவுக்காக சுரேஷ் ரெய்னா 4,687 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, தோனி 4,699 ரன்கள் சிஎஸ்கே அணிக்காக எடுத்துள்ளார். மொத்த ஐபிஎல் தொடரிலும் 5,273 ரன்கள் எடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்தார். அதிலிருந்து சிஎஸ்கே அணி வீழ்ச்சியை சந்தித்து வருவது ரசிகர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.