டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

3 அணிகளுக்கும் அறிமுகப் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்த ஷ்ரேயாஸ் ஐயர்..

News image
ஷ்ரேயாஸ் ஐயர்..
Updated On :26 மார்ச் 2025, 7:55 am

DIN

அறிமுகமான மூன்று அணிகளுக்கும் முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங்கின் அதிரடியால் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், பஞ்சாப் கேப்டனான ஷ்ரேயாஸ் புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அந்த வகையில் மூன்று அணிகளை வழிநடத்திய 5-வது கேப்டன் என்ற சாதனையையும், 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

முதல் முறையாக தில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் சென்னை அணியை வீழ்த்தினார். அதன்பின்னர் இந்தாண்டு பஞ்சாப் அணி சார்பில் குஜராத் அணியை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம், அறிமுகமான முதல் போட்டியிலேயே மூன்று வெவ்வேறு அணிகளுக்கு மூன்று போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி வெவ்வேறு அணிகளுக்கு அரைசதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

அவருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் புணே, ராஜஸ்தான் அணிகளுக்காக முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும், புணே வாரியர்ஸ் அணிக்கான போட்டியில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.