திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ஆர்சிபி, கேகேஆர் பயிற்சியை பாதித்த மழை; நாளை போட்டி நடைபெறுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

News image
- படம் | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (எக்ஸ்)
Updated On :21 மார்ச் 2025, 4:38 pm

DIN

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் பயிற்சி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) முதல் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

மழையால் பாதித்த பயிற்சி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், மழையால் அந்த அணிகளின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளது நாளை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளுக்குமான பயிற்சி இன்று (மார்ச் 21) மாலை 5 மணிக்கு திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், 6 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியதால் இரு அணிகளுக்குமான பயிற்சி பாதிக்கப்பட்டது. ஆடுகளங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் முழுவதுமாக மூடப்பட்டது.

வானிலை ஆய்வு மையம் சார்பில் கொல்கத்தாவுக்கு நாளை (மார்ச் 22) கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், முதல் போட்டி மழையால் பாதிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. விட்டு விட்டு மழை பெய்யும் பட்சத்தில் ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும், மழையால் போட்டி நடத்த முடியாத சூழல் உருவானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.