டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர்! ஐபிஎல்லில் தொடர் வெற்றிகள்!

News image
ஷ்ரேயாஸ் ஐயர்...- படம் | பிசிசிஐ
Updated On :2 ஏப்ரல் 2025, 9:04 am

DIN

சென்னை முன்னாள் கேப்டன் தோனியை முந்தி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

18-வது ஐபிஎல் தொடரின் 13-வது போட்டியில் பஞ்சாப் - லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது. அதிரடியாக விளையாடிய பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 52* ரன்களும் விளாசினர். 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் கேப்டன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அந்த வகையில், ஐபிஎல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் கேப்டன் தோனியைப் பின்னுக்குத் தள்ளி பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் 2-வது இடம்பிடித்துள்ளார்.

கடந்தாண்டில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக இறுதிப் போட்டியுடன் சேர்த்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார். இந்தத் தொடரில் பஞ்சாப் அணிக்காக 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார்.

தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன்கள்

10 -கௌதம் கம்பீர் (கொல்கத்தா) - 2014-2015

8 - ஷேன் வார்னே (ராஜஸ்தான்) - 2008

8 - ஷ்ரேயாஸ் ஐயர் (கொல்கத்தா, பஞ்சாப்) - 2024-25

7 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2013

6 - கௌதம் கம்பீர் (கொல்கத்தா) - 2012

6 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2014

6 - கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்) - 2018

6 - எம்.எஸ்.தோனி (சென்னை) - 2019

6 - ஃபாப் டூபிளெசிஸ் (பெங்களூரு) - 2024

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.