சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 94.93ஆக நிறைவு!தொடரும் சரிவு! 4வது நாளாக வீழ்ச்சியுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!!தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி!

லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்: 2028 தொடக்கத்தில் கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள்!

லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள் 2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளதைப் பற்றி...

Updated On :

லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் கிரிக்கெட் தகுதிச் சுற்றுப் போட்டிகள் 2028 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன.

1904-க்குப் பிறகு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் வருகிற 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தொடருக்கான ஆண்கள், பெண்கள் இருவருக்குமான தகுதிச்சுற்றுப் போட்டிகளுக்கான கால அட்டவணை இந்த மாதம் துபையில் நடந்த ஐசிசி உறுப்பு நாடுகளுடான கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மேலும், 2029 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 8 முதல் 12 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக, 2027 மற்றும் 2031-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளுக்காக, ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 7 அணிகள், 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் சிறப்பாக செயல்பட்ட டி20 அணிகளின் அடிப்படையில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒலிம்பிக்குக்குத் தகுதிபெற்றுள்ளன.

ஆடவர் பிரிவில், இந்த ஆண்டு டிச. 31 ஆம் தேதி நிலவரப்படி ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய கண்டங்களில் இருந்து முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2026 ஜூன் 30 ஆம் தேதி முதல் டிச. 31 வரையிலான தகுதிச் சுற்றுக் காலத்தில், தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் வந்தால், போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் பங்கேற்கத் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை டிச. 31 ஆம் தேதிக்குள் அமெரிக்கா தரவரிசையில் இடம்பிடிக்கவிட்டால் அட்டவணை மாற்றி அமைக்கப்படும்.

Summary

The qualifiers for the men's and women's cricket competitions at the 2028 Los Angeles Olympics are scheduled for January-February 2028, with eight teams set to feature in each tournament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.