இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஆஸி.க்கு எதிரான 2ஆவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி குறித்து...

South Africa squad for the second Test

இரண்டாவது டெஸ்ட்டிற்கான தென்னாப்பிரிக்க அணி - படம்: எக்ஸ் / புரோட்டியாஸ் மென்

Updated On :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது.

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக்.18ஆம் தேதி கெபெர்காவில் நடைபெற இருக்கிறது.

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்குப் பதிலாக மேத்திவ் பிரீட்ஸ்கி சேர்க்கப்பட்டுள்ளார்.

காயம் காரணமாக டோனி டீ ஜொர்ஸி அணியில் இடம்பெறசில்லை எனவும், விக்கெட் கீப்பராக ரியான் ரிக்கெல்டன் செயல்படுவார் எனவும் ’கிரிக்கெட் சௌத் ஆப்பிரிக்கா’ தெரிவித்துள்ளது.

2ஆவது போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா, மார்க்வெஸ் அக்கர்மேன், டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ பிரீட்ஸ்கி, கார்பின் போஷ், ஜெரால்ட் கோட்ஸி, சைமன் ஹார்மர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, அன்ரிச் நார்கே, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்

மூன்று டெஸ்ட் போட்டிக்கான தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி அக்.18, மூன்றாவது போட்டி அக்.27ஆம் தேதி தொடங்கவிருக்கின்றன.

Summary

Second Test against Australia: Change in the South African team!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.