தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய் கடந்த மே.10ஆம் தேதி பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் விஜய்யுடன் இருந்த காவல் சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் போலவே இருந்ததால் இணையத்தில் வைரலானார்.
முன்னாள் சிஎஸ்கே வீரர் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “காவலர் பணி எப்போதும் முதன்மையானதுதான். ஆனால், லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கேவுக்கு முக்கியமான போட்டி இருக்கிறதே. இது மிகவும் ஓவராக இருக்கிறது. இது பகலில் நடைபெறும் போட்டி. சீக்கிரமாக காரைப் பிடித்து சேப்பாக்கம் வரவும் அன்ஷுல் கம்போஜ். மிகப்பெரிய போட்டி” எனக் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.
சிஎஸ்கே அணி லக்னௌக்கு எதிரான ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் அன்ஷுல் கம்போஜ் 2 விக்கெட்டிகள் எடுத்து அசத்தினார். இந்த நிலையில், இந்த வைரலான மீம் குறித்து அவரிடம் காண்பிக்கப்பட்டது. அதைப் பார்த்த கம்போஜ் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வரின் அருகில் இருக்கும் நபர் இவர்தானா! இன்ஸ்டாகிராமில் பலரும் எனக்கு இந்த மீம்ஸைப் பகிர்ந்தார்கள். நான் அவர்களிடம் நானில்லை எனக் கூறினேன். எல்லோருமே என்னிடம், “அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டார்கள். எனக்குத் தெரியவில்லை. என்னைப் போலவே சிறியதளவில் இருக்கிறார். முழுவதுமாக இல்லை. அவர் தனது தொப்பியை கழற்றினால் முழுவதுமாகப் பார்க்கலாம் என்றார்.
பின்னர், அந்த இராணுவ வீரரை சிஎஸ்கே வீரர் அன்ஷுல் கம்போஜ் சந்தித்தார். இருவருக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசங்கள் இருந்தாலும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகினார்கள். இந்த விடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Summary
Who Stood Beside 'Chief Minister' Vijay During His Swearing-in? CSK Player Clarifies!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காயம் காரணமாக வீடு திரும்பிய எம்.எஸ். தோனி..! கடைசி போட்டியிலும் விளையாடவில்லை!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

36 பந்துகளில் சதம்; ரத்தம் சொட்ட விளையாடிய இளம் வீரரை குறிவைக்கும் சிஎஸ்கே! யார் இந்த ஆயுஷ் வர்தக்?
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



