ஐபிஎல் 2026 சீசனில் முதல்முறையாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளது.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் கடந்த மூன்று சீசன்களாகவே மிகுந்த விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இந்த சீசனில் ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
அருண் ஜேட்லி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி 20 ஓவர்களில் 155/7 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய சிஎஸ்கே அணி 17.3 ஓவர்களில் 159/2 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் 45 ரன்களுக்கு 2 விக்கெட் விழுந்தபோது கார்த்திக் சர்மா களமிறங்கினார். சஞ்சு சாம்சன் 87* ரன்கள், கார்திக் சர்மா 41* ரன்கள் எடுத்தார்கள். கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்த பார்ட்னர்ஷிப் 114 ரன்கள் எடுத்து இலக்கை கடக்க வித்திட்டது.
முதல்முறையாக 100 பார்ட்னர்ஷிப்பை கடந்த சிஎஸ்கே அணியின் பேட்டிங்கு எக்ஸ் பக்கத்தில் சிறப்புப் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் - கார்த்திக் சர்மா இணை 98* ரன்கள் எடுத்திருந்தது.
சிஎஸ்கே அணி புள்ளிப் பட்டியலில் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தபட்சம் மூன்றிலாவது வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Summary
First century partnership for CSK in IPL 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காயம் காரணமாக வீடு திரும்பிய எம்.எஸ். தோனி..! கடைசி போட்டியிலும் விளையாடவில்லை!

சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவாரா ருதுராஜ் கெய்க்வாட்?

கிளாசன், இஷான் கிஷன் அதிரடி: சிஎஸ்கே தோல்வி!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



