பிரிட்டிஷ் ஒளிபரப்பு பொறியாளர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளது.
ஒளிபரப்பு பொறியாளரான ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் (76), மும்பையில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, திங்கள்கிழமை (மார்ச் 30) காலை தனது அறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, விடுதி நிர்வாகத்தினரால் அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ உடன் பணியாற்றி வந்த ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த ஐபிஎல் நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு எல்லாவித உதவிகளையும் செய்வதாகவும் செவ்வாய்க்கிழமை உறுதியளித்தது.
இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “எங்களின் ஒளிபரப்புச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இருந்த அர்ப்பணிப்பு மிகுந்த ஒளிபரப்புப் பொறியாளரான ஜேன் வில்லியம்ஸ் லாங்ஃபோர்டின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாயகத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்.
இந்த இக்கட்டான சூழலில் அவரது குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் ஐபிஎல் நிர்வாகம் வழங்க உறுதி அளிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உடற்கூராய்வில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Expressing condolences on the passing of a British broadcast engineer, the IPL administration has stated that it is prepared to extend all necessary assistance to his family.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருண் சக்ரவர்த்தி டி20யில் 200 விக்கெட்டுகள்!

ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்த டிம் டேவிட்!

தனது வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர்!

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


