மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை திணறடித்த வைபவ் சூர்யவன்ஷி: சஞ்சய் பங்கார்

உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.

News image

வைபவ் சூர்யவன்ஷி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :31 மார்ச் 2026, 12:02 pm

உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக அவர் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசி சர்வதேச வீரர்களுக்கு சவாலளிக்கக் கூடிய மாட் ஹென்றியின் பந்துவீச்சை எளிதாக விளையாடினார். பந்தை இரண்டு விதமாக ஸ்விங் செய்யக் கூடிய கலீல் அகமது பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடினார்.

அதுமட்டுமின்றி, சிறந்த லென்த்தில் பந்துவீசக் கூடிய அன்ஷுல் கம்போஜ் மற்றும் மிஸ்டிரி பந்துவீச்சாளரான நூர் அமகமது பந்துவீச்சையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை அவர் அழுத்தத்தில் வைத்திருந்தார். அவரது ஆட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த சீசன் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது என்றார்.

Summary

Sanjay Bangar has praised Rajasthan Royals player Vaibhav Suryavanshi for playing fearlessly and aggressively against world-class bowlers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.