எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆர்சிபி பேரணியில் பலியான ரசிகர்களுக்காக சின்னசாமி திடலில் 11 காலி இருக்கைகள்!

ஆர்சிபி பேரணியில் பலியான ரசிகர்களுக்காக சின்னசாமி திடலில் 11 காலி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதைப் பற்றி...

News image

ஆர்சிபி ரசிகர்கள்...

Updated On :24 மார்ச் 2026, 9:31 am

கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 11 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சின்னசாமி திடலில் 11 இருக்கைகள் காலியாக விட ஆர்சிபி அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

கடந்தாண்டு (2025) ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. சாம்பியன் பட்டத்தை வென்ற களிப்பில் வீரர்கள் ஐபிஎல் கோப்பையுடன் பெங்களூரு சின்னசாமி திடலில் ஜூன் 4 ஆம் பேரணி நடத்தினர். மாநில அரசு, கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.

இதில் பங்கேற்கச் சென்ற பார்வையாளர்கள் 11 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறி ஓராண்டைக் கடந்த நிலையில், நிகழாண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது.

கோலகலமாகத் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

இந்த நிலையில், பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணி கொண்டாட்டத்தில் சிக்கி பலியான 11 பேருக்கு அஞ்சலி செலுத்துவிதமாக சின்னசாமி கிரிக்கெட் திடலில் 11 இருக்கைகள் காலியாக விட அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. ஆர்சிபி அணி வீரர்கள் பயிற்சியின் போது 11 என்ற எண் அச்சிட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாடுவார்கள் என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆர்சிபி அணியின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் மேனன் கூறுகையில், “ஐபிஎல் போட்டிக்கு முன்னதாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர்கள் அனைவரும் 11 என்ற எண் அச்சிட்ட ஜெர்ஸியை அணிந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.

மேலும், அவர்கள் கருப்பு கண்ணாடியும் அணிந்துகொள்வார்கள். பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சின்னசாமி திடலில் 11 காலி இருக்கைகள் விட முடிவெடுத்துள்ளோம். எப்போதும் நம்முடன் இருக்கும் ரசிகர்களுக்காக...” எனத் தெரிவித்தார்.

Summary

As the M Chinnaswamy Stadium prepares to host its first Indian Premier League (IPL) match since the tragic events of last summer, the Royal Challengers Bengaluru (RCB) management has announced a series of poignant tributes to honour the 11 fans who lost their lives. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.