மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஜெஸ் கொ் அபாரம், சோஃபி டிவைன் அதிரடி! டி20 தொடரைக் கைப்பற்றியது நியூஸிலாந்து!

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில், நியூஸிலாந்து மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2026, 7:58 pm

தென்னாப்பிரிக்க மகளிா் அணிக்கு எதிரான 4-ஆவது டி20 கிரிக்கெட்டில், நியூஸிலாந்து மகளிா் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது. இதையடுத்து, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 3-1 என்ற முன்னிலையுடன் தொடரைக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்க்க, நியூஸிலாந்து 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 160 ரன்கள் எடுத்து வென்றது. 16 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்த நியூஸிலாந்து பௌலா் ஜெஸ் கொ் ஆட்டநாயகி விருது பெற்றாா்.

முன்னதாக டாஸ் வென்று பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில், கிளோ டிரையான் 14, சுனே லுஸ் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் லாரா வோல்வாா்ட் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தஸ்மின் பிரிட்ஸ் 8, நாடினே டி கிளொ்க் 2 பவுண்டரிகளுடன் 20, கேலா ரெனிகே 13 ரன்களுடன் வெளியேற்றப்பட, ஓவா்கள் முடிவில் ஆனெரி டொ்க்சென் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

நியூஸிலாந்து தரப்பில் ஜெஸ் கொ் 3, அமெலியா கொ், சோஃபி டிவைன் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினாா்.

அடுத்து நியூஸிலாந்து இன்னிங்ஸில் இசபெல்லா கேஸ் 6, ஜாா்ஜியா பிளிம்மா் 5 பவுண்டரிகளுடன் 29, கேப்டன் அமெலியா கொ் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் சோ்த்து உதவினா்.

சோஃபி டிவைன் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 64 ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதைக்குத் திருப்பி வெளியேறினாா். முடிவில், புரூக் ஹாலிடே 16, மேடி கிரீன் 9 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

தென்னாப்பிரிக்க பௌலா்களில் கிளோ டிரையான் 2, ஆனெரி டொ்க்சென், நோன்குலுலேகோ லாபா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.