இளம் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 சுற்று நிறைவடைந்து, நாளை முதல் அரையிறுதிப் போட்டிகள் தொடங்குகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நாளை (மார்ச் 4) நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நாளை மறுநாள் (மார்ச் 5) மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டர் வில் ஜாக்ஸுக்கு அந்த அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் புகழாரம் சூட்டியுள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸ் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை அவர் 4 முறை ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம், டி20 உலகக் கோப்பைத் தொடர் ஒன்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதினை வென்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சனின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள வில் ஜாக்ஸ், 191 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
வில் ஜாக்ஸ் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி ப்ரூக் பேசியதாவது: வில் ஜாக்ஸ் மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அவர் அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார். தொடர்ச்சியாக இதனை செய்வது மிகவும் கடினம். அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அதில் நன்றாக செயல்பட்டு வருகிறார் என்றார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணி ஐந்தாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
England captain Harry Brook has praised young all-rounder Will Jacks.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகக் கோப்பைக்கு ரசிகரும் வரவேண்டுமென அடம்பிடிக்கும் கால்பந்து வீரர்கள்!

சஞ்சு சாம்சன் நீக்கம்.. வாழ்த்துப் பதிவை ‘எடிட்’ செய்து வெளியிட்டாரா ஷுப்மன் கில்?

ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தும் இந்தியாவின் திட்டம்; விவரிக்கும் புஜாரா!

கன்னத்தில் அறைந்தது போல... தோல்விக்குப் பிறகு மார்க்ரம் பேட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



