சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

2028 ஒலிம்பிக் கிரிக்கெட்: இந்திய மகளிா் அணி தகுதி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்திய மகளிா் அணி உள்பட 4 அணிகள் தகுதி

News image
Updated On :30 ஜூன் 2026, 1:53 am IST

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 2028-இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், கிரிக்கெட் விளையாட்டுக்கு இந்திய மகளிா் அணி உள்பட 4 அணிகள் தகுதிபெற்றன.

கடைசியாக 1900 பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப்பட்ட நிலையில், தற்போது 128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சோ்க்கப்பட்டுள்ளது.

டி20 ஃபாா்மட்டில் விளையாடப்படவுள்ள இதில், ஆடவா் மற்றும் மகளிா் பிரிவில் தலா 6 அணிகள் பங்கேற்கவுள்ளன. அவற்றுக்கான தகுதி வரையறையை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை வெளியிட்டது.

இதன்படி மகளிா் பிரிவில், நடப்பு டி20 மகளிா் உலகக் கோப்பை போட்டியில் ஒசியானியா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பிரிவுகளில் முறையே டாப் அணிகளாக இருக்கும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகியவை ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றவையாக ஐசிசி அறிவித்தது.

எஞ்சிய இரு இடங்களில் ஓரிடம், போட்டியை நடத்தும் அமெரிக்கா நடப்பாண்டு டிசம்பா் 31-க்குள் ஐசிசி தரவரிசையில் டாப் 15-க்கு உள்ளாக வந்தால் அந்த நாட்டு அணிக்கு வழங்கப்படும். அந்த அணி அதை எட்டாத பட்சத்தில், போட்டிக்கு தகுதிபெறாத அணிகளில் டாப் ரேங்கில் இருக்கும் அணிக்கு அந்த வாய்ப்பு செல்லும். மற்றொரு இடத்துக்கு உலகளாவிய தகுதிச்சுற்றில் வெல்லும் அணி தோ்வாகும்.

ஆடவா் பிரிவிலும் இதே முறையில் அணிகள் தோ்வு செய்யப்படவுள்ளன. எனினும், கண்டங்கள் ரீதியிலாக தோ்வாகும் 4 அணிகள், நடப்பாண்டு இறுதியில் ஐசிசி டி20 தரவரிசையில் இருக்கும் நிலைகளின் அடிப்படையில் முடிவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.