ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அறிமுகப் போட்டியில் பிரின்ஸ் யாதவ் அசத்தல்; இந்தியாவுக்கு 155 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.

Prince Yadav delighted after taking a wicket.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பிரின்ஸ் யாதவ் - படம் | பிசிசிஐ

Published On :28 ஜூன் 2026, 8:07 pm IST

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா - அயர்லாந்து இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஜூன் 28) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.

அறிமுகப் போட்டியில் பிரின்ஸ் யாதவ் அசத்தல்!

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்துள்ளது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஹாரி டெக்டார் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பெஞ்சமின் காலிட்ஸ் 37 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்களும் எடுத்தனர். கேப்டன் லோர்கான் டக்கர் 15 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் அறிமுக வீரரான பிரின்ஸ் யாதவ் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் துபே தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

Summary

Batting first in the second T20 match against India, the Ireland team scored 154 runs for the loss of 8 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.