இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் இந்தத் தொடரில் சமனில் உள்ளது. இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்ஸில் முறையே நியூசிலாந்து 438 ரன்களும், இங்கிலாந்து 354 ரன்களும் எடுத்தன. 88 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்தது.
4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி தேனீர் இடைவேளைக்கு பிறகு 9 விக் கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 14 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 96 ரன்களுடன் விளையாடியது. 2-வது இன்னிங்சில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டோக்ஸ் 30 ரன்னில் கேட்ச்சானார்.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி 4 நாள்கள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் திடீரென அறிவித்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இரவு விடுதியில் உள்ளூர் ரக்பி வீரருடன் தகராறில் ஈடுபட்டதாக சர்ச்சையில் சிக்கிய பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன் இருவரும் 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு 3-வது டெஸ்டுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
2011-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்காக அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், 2013-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக தனது ஓய்வு முடிவை சக வீரர்களிடம் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். பின்னர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.
கடந்த 15 ஆண்டுகளாக இங்கிலாந்து அணிக்காக ஆடும் 35 வயதான பென் ஸ்டோக்ஸ் 121 டெஸ்ட், 114 ஒருநாள் மற்றும் 43 இருபது ஓவர் போட் டிகளில் விளையாடி இருக்கிறார். 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை, 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றதில் ஸ்டோக்ஸ் முக்கிய பங்காற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









