ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சர்வதேச டி20 போட்டிகளில் ஷிவம் துபே புதிய சாதனை!

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஷிவம் துபே புதிய சாதனை படைத்துள்ளார்.

Shivam Dube

ஷிவம் துபே - படம் | பிசிசிஐ

Published On :27 ஜூன் 2026, 5:23 pm IST

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஷிவம் துபே புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - அயர்லாந்து அணிகள் தங்களுக்குள் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் நேற்று (ஜூன் 26) நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் ஷிவம் துபே அதிரடியாக 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இந்திய அணிக்காக இதுவரை 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷிவம் துபே 1016 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 66.

முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (ஜூன் 28) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian player Shivam Dube has set a new record in international T20 matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.