முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட் புதிய சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

News image

ஜோ ரூட் - படம் | AP

Updated On :22 ஜூன் 2026, 4:24 pm IST

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 253 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்ட ஜோ ரூட் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 77 ரன்களும் எடுத்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 123 ரன்கள் (இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து) எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து ஜோ ரூட் சாதனைப் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் ஜோ ரூட், இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுகல்ருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 165 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட், 14075 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 67 அரைசதங்கள் மற்றும் 41 சதங்கள் அடங்கும். அவரது அதிபட்ச ஸ்கோர் 262.

டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

England player Joe Root has set a new record for scoring most runs in Test matches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.