ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் ஹர்மன்பிரீத் கௌர் பேசியுள்ளார்.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் மான்செஸ்டரில் நேற்று (ஜூன் 21) நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, அதன் மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்துள்ளது. லீக் சுற்றில் இந்திய அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் மீதமிருக்கின்றன.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் எங்களுக்கு ஒன்றிரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. துரதிருஷ்டவசமாக, எங்களால் அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. எங்களுக்கு இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கின்றன. இந்த நேரத்தில் மிகவும் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது அவசியம்.
ஸ்ரீ சரணி மற்றும் ஷஃபாலி வர்மா இருவரும் நன்றாக பந்துவீசியதாக நினைக்கிறேன். அவர்கள் தென்னாப்பிரிக்க அணிக்கு சவாலளிக்கும் விதமாக பந்துவீசினார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களுக்கு மற்ற வீராங்கனைகளிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அடுத்து விளையாடவுள்ள இரண்டு போட்டிகளில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இந்திய அணி அதன் அடுத்த இரண்டு போட்டிகளில் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Harmanpreet Kaur has spoken about the defeat against South Africa in the ICC Women's T20 World Cup series.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 உலகக் கோப்பை: தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்ற ஆஸி. மகளிரணி!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
மகளிர் டி20 உலகக் கோப்பை: இந்தியா பேட்டிங்!

மகளிர் டி20 உலகக் கோப்பை: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |





