தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது.

News image

ஹார்திக் பாண்டியா - படம் | AP

Updated On :21 ஜூன் 2026, 6:22 pm IST

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற ஜூலை 1 முதல் தொடங்குகிறது. அதன் பின், ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது பேசுபொருளாகியுள்ளது.

ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா,விராட் கோலி, கே.எல்.ராகுல், இஷான் கிஷன், குல்தீப் யாதவ், அக்‌ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா போன்ற முத்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த வீரர்கள் பலரும் அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், ஹார்திக் பாண்டியா இல்லாதது பலருக்கும் குழப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது குறித்து பிசிசிஐ தரப்பில் எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

அண்மையில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வேகப் பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்காக இந்திய அணி நிர்வாகம் வீரர்களை தயார்படுத்தி வரும் நிலையில், ஹார்திக் பாண்டியா அணியில் சேர்க்கப்படாது ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான திட்டத்தில் அவர் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Summary

he exclusion of all-rounder Hardik Pandya from the Indian squad for the ODI series against England has become a topic of discussion.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.