நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

News image

ரிச்சா கோஷ் - படம் | பிசிசிஐ

Updated On :16 ஜூன் 2026, 8:31 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக இந்திய வீராங்கனை ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று முன் தினம் (ஜூன் 14) தனது முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா 68 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் 36 ரன்களும், ரிச்சா கோஷ் 34 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியது நம்பிக்கையளித்ததாக ரிச்சா கோஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடியது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த ஆட்டம் எனக்கு மிகவும் நம்பிக்கையளித்தது. நாங்கள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடியதும் என்னுடைய நம்பிக்கையை அதிகரித்ததாக நினைக்கிறேன். அடுத்தடுத்த போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.

நடப்பு ஐசிசி டி20 தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கிய நிலையில், நாளை (ஜூன் 17) நடைபெறும் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது.

Summary

Indian player Richa Ghosh has stated that performing well in the match against Pakistan was encouraging.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.