ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் அணி!

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Pakistan team players

பாகிஸ்தான் அணி வீரர்கள் - படம் | AP

Published On :23 ஜூலை 2026, 9:13 pm IST

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பைத் தொடருக்கான தயாரிப்பில் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

இந்தத் தொடர் அடுத்தாண்டு மே 15 முதல் மே 26 ஆம் தேதி இடைவெளியில் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ளதால், 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் இரு அணிகளுக்கும் தங்களை உலகக் கோப்பைக்கு தயார்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.

கடைசியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. தற்போது, மீண்டும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

முன்னதாக, இந்த ஆண்டு நவம்பரில் முத்தரப்பு தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் விவரம்

மே 15 - முதல் ஒருநாள் போட்டி, சௌத்தாம்டன்

மே 19 - இரண்டாவது ஒருநாள் போட்டி, மான்செஸ்டர்

மே 21 - மூன்றாவது ஒருநாள் போட்டி, லீட்ஸ்

மே 23 - நான்காவது ஒருநாள் போட்டி, செஸ்டர்-லே-ஸ்டிரீட்

மே 26 - ஐந்தாவது ஒருநாள் போட்டி, கார்டிஃப்

Summary

The Pakistan team is set to tour England for a five-match ODI series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.