ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; ஒருநாள் தொடரை வென்ற நியூசிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Mark Chapman smashing the ball to the boundary.

பந்தை பவுண்டரிக்கு விளாசும் மார்க் சாப்மேன் - படம் | நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

Published On :20 ஜூலை 2026, 8:25 pm IST

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பார்படாஸில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

அமிர் ஜாங்கு அரைசதம்; நியூசிலாந்துக்கு 189 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 44.4 ஓவர்களில் 188 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அமிர் ஜாங்கு அரைசதம் எடுத்தார். அவர் 73 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, குடகேஷ் மோட்டி 41 ரன்களும், அக்கீம் அகஸ்டி 33 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

நியூசிலாந்து தரப்பில் மாட் ஃபிஷர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நாதன் ஸ்மித் மற்றும் ஜேடன் லென்னாக்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

த்ரில் வெற்றியுடன் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து!

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 44.1 ஓவர்களில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக மார்க் சாப்மேன் 82 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 34* ரன்களும், மைக்கேல் பிரேஸ்வெல் 32 ரன்களும் எடுத்தனர். வில் யங் 20 ரன்கள் எடுத்தார்.

40 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்தின் வெற்றிக்கு 9 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பவுண்டரி அடிக்க வெற்றிக்குத் தேவையான ரன்கள் குறைந்தன. அதன் பின், மிட்செல் சாண்ட்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் தவறவிட்டதால் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் திரும்பியது. இறுதியில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மேத்யூ ஃபோர்ட் இரண்டு விக்கெட்டுகளையும், அல்சாரி ஜோசப் மற்றும் ஜேடன் சீல்ஸ் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பார்படாஸில் நாளை மறுநாள் (ஜூலை 22) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Summary

New Zealand secured a thrilling one-wicket victory in the fourth ODI against the West Indies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.