ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

முதல் இந்திய வீரர்... லார்ட்ஸில் வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

ஒருநாள் போட்டிகளில் லார்ட்ஸ் திடலில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

Rohit Sharma smashing the ball for a six.

பந்தை சிக்ஸருக்கு விளாசும் ரோஹித் சர்மா - படம் | பிசிசிஐ

Published On :20 ஜூலை 2026, 7:10 pm IST

ஒருநாள் போட்டிகளில் லார்ட்ஸ் திடலில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய இந்திய அணி, 50 ஓவர்களில் 360 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 110 பந்துகளில் 138 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 17 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

ரோஹித் சர்மா வரலாற்றுச் சாதனை!

நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா அவரது 34-வது சதத்தைப் பதிவு செய்தார். இங்கிலாந்து மண்ணில் இது அவரது 8-வது சதமாகும்.

மேலும், ஒருநாள் போட்டிகளில் லார்ட்ஸ் திடலில் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்தார். முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய ரோஹித் சர்மா, கடைசிப் போட்டியில் இந்த வரலாற்றுச் சாதனையை படைத்தார்.

லார்ட்ஸ் திடலில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறவுள்ளதாக தவறான தகவல் பரவிய நிலையில், அவர் இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Rohit Sharma has achieved the historic feat of becoming the first Indian player to score a century in an ODI match at Lord's.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.