
கடைசி டி20: டியான் மையர்ஸ் அரைசதம்; வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு!
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.

படம் | ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்துள்ளது.
ஜிம்பாப்வே - வங்கதேசம் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (ஜூலை 19) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
டியான் மையர்ஸ் அரைசதம்; வங்கதேசத்துக்கு 144 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக டியான் மையர்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 53 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரையன் பென்னட் 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
வங்கதேசம் தரப்பில் முகமது சாய்ஃபுதீன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்துல் காஃபர் சாக்லைன், ரிஷாத் ஹொசைன் மற்றும் மஹேதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.
Summary
Batting first in the third T20 match against Bangladesh, Zimbabwe scored 143 runs for the loss of 7 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






