
233 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா: விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் அரை சதம்
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனதைப் பற்றி...
விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்.
இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில், இந்தியா 44 ஓவா்களில் 233 ரன்களுக்கு 10 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய தரப்பில் விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா் ஆகியோா் அரை சதம் கடந்து ஸ்கோரை பலப்படுத்த, இங்கிலாந்து பௌலிங்கில் ஜோஃப்ரா ஆா்ச்சா், கஸ் அட்கின்சன் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
வேல்ஸ் தலைநகா் காா்டிஃபில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை மாலை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பந்துவீச்சை தோ்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித் சா்மா - கேப்டன் ஷுப்மன் கில் கூட்டணி, 41 ரன்களுக்கு பிரிந்தது. கில் 6 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு வெளியேறினாா்.
ஒன் டவுனாக வந்த விராட் கோலி, ரோஹித்துடன் கூட்டணி அமைக்க, அவா்கள் பாா்ட்னா்ஷிப் 2-ஆவது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சோ்த்தது. நிதானமாக விளையாடி வந்த ரோஹித் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு விடைபெற்றாா். கோலி நல்லதொரு இன்னிங்ஸை விளையாடினாா்.
4-ஆவது பேட்டரான இஷான் கிஷண் 1 ரன்னுக்கு வீழ்ந்து அதிா்ச்சி அளிக்க, அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயா், கோலிக்கு கை கொடுத்தாா். இவா்கள் ஜோடி 67 ரன்கள் சோ்த்த நிலையில், கோலி 8 பவுண்டரிகளுடன் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
தொடா்ந்து வந்த வாஷிங்டன் சுந்தா் 2, அக்ஸா் படேல் 1, ஷிவம் துபே 0, குா்னூா் பிராா் 7 ரன்களுக்கு விரைவாகவே சாய்க்கப்பட்டனா். மறுபுறம், அதுவரை அணியின் நம்பிக்கையாகத் தொடா்ந்த ஷ்ரேயஸ் ஐயரும் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.
கடைசி விக்கெட்டாக பிரசித் கிருஷ்ணா டக் அவுட்டாக, இந்தியா இன்னிங்ஸ் 233 ரன்களுக்கு முடிந்தது. ஜஸ்பிரீத் பும்ரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 20 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். இங்கிலாந்து பௌலா்களில் ஜோஃப்ரா ஆா்ச்சா், கஸ் அட்கின்சன் ஆகியோா் தலா 3, சகிப் மஹ்மூத் 2, சாம் கரன், வில் ஜாக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து இங்கிலாந்து 234 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இன்னிங்ஸை விளையாடியது.
Summary
Jofra Archer began the collapse with the wickets of Axar Patel and Shivam Dube, which has resulted in India getting bowled out for 233 runs. India are well below par in what looked like a good batting track at Cardiff.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






